சசிகுமாரை ட்விட்டருக்கு கொண்டு வந்தது யார்?


சசிகுமாரை ட்விட்டருக்கு கொண்டு வந்தது யார்?

இன்றைய சுள்ளான் முதல் சூப்பர் ஸ்டார் வரை ட்விட்டர் பக்கத்தில் இயங்கி வருகின்றனர். இந்த வரிசையில் உலகநாயகன் கமல்ஹாசனும் அண்மையில் தன்னை ட்விட்டரில் இணைத்துக் கொண்டார்.

இவரைத் தொடர்ந்து நடிகர் சசிகுமாரும் ட்விட்டரில் இணைந்தார். இதுகுறித்து அவரே கூறியதாவது…

“என் பெயரை யாரோ சில விஷமிகள் தவறாகப் பயன்படுத்தி வந்தனர். என் பெயரில் நிறைய பேர் செயல்படுவதால் நுழைய வேண்டிய கட்டாயத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

என் பார்வை, சந்தோஷம், என் படம் சம்பந்தப்பட்ட காட்சிகள், தகவல்கள், இப்படி எதுவானாலும் மனசுல பட்டதை அப்படியே ட்விட்டரில் தெரிவிப்பேன். இறுதியாக “என்னையும் இதுக்கு வரவைச்சிட்டீங்களே” என பதிவிட்டுள்ளார் சசிகுமார்..