“தல தளபதியிடமிருந்து பதில் வருமா?? காத்திருக்கும் சசி!!”


“தல தளபதியிடமிருந்து பதில் வருமா?? காத்திருக்கும் சசி!!”

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தன்னை உருவாக்கிக் கொண்டவர் சசிக்குமார்.

வருடத்திற்கு இரண்டு படம் தந்த இவர் வருடக்கணக்கில் காத்திருந்து வரலட்சுமியுடன் நடித்துள்ள “தாரை தப்பட்டை” ஒருவழியாக பொங்கலுக்கு வெளியாகிறது.

இதற்கு நடுவில் வசந்த மணி இயக்கத்தில் ‘வெற்றிவேல்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். மியா ஜார்ஜ் உடன் சசிக்குமார் நடித்துள்ள இப்படமும் வெளிவரத் தயாராகி நிற்கிறது.

நடிகனாக மாறிவிட்டாலும் மீண்டும் படங்களை இயக்கும் எண்ணமும் தீவிரமடைந்துள்ளதாம். அதற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இறங்கியுள்ளார்.

இளைய தளபதி விஜய்யை சந்தித்து கதையும் கூறிவிட்டு திரும்பியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், அஜித்திற்காக ஒரு கதையுடன் தயார் நிலையில் வைத்து காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தல, தளபதி யார் கால்ஷீட் கிடைச்சாலும் இயக்கப் போய்விடுவாராம் சசி..