விஜய்க்கும் உதயநிதிக்கும் இடையில் சிக்கிய சசிகுமார்..!


விஜய்க்கும் உதயநிதிக்கும் இடையில் சிக்கிய சசிகுமார்..!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகிறது. ஆனால் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தெறி வெளியானதால் மற்ற படங்கள் ஒதுங்கிக் கொண்டன.

படம் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும் இன்னும் தியேட்டர்கள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

எனவே நாளை (ஏப்ரல் 22) தேதி வெளியாகவுள்ள படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்க பெரும் போராட்டமாக இருக்கிறதாம்.

இந்நிலையில், சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தை முதலில் ஏப்ரல் 29 அன்றுதான் வெளியிடவிருந்தனர்.

பின்னர் தெறிக்கு ஒரு வாரம் போதும் என நினைத்தார்களோ என்னவோ, 22 ஆம் தேதி வெளியிட முடிவு செய்து அதிகாரப்பூர்வமான அறிவித்தனர்.

தற்போது தியேட்டர்கள் அதிகளவில் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் ஒத்திப்போடலாம் என்று பார்த்தால், அடுத்த வாரம் உதயநிதியின் மனிதன், களம் உள்ளிட்ட 4 படங்கள் வெளியாவதால் தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்.

எனவே, வேறு வழியில்லாமல் நாளை 100க்கும் குறைவான தியேட்டர்களில் வெற்றிவேல் படத்தை திரையிட இருக்கிறார்கள்.