ரஜினியின் ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ வரிசையில் விஜய்யின் ‘தெறி’..!


ரஜினியின் ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ வரிசையில் விஜய்யின் ‘தெறி’..!

விஜய்யின் ‘தெறி’ பாடல்கள் வெளியாக இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், அப்படத்தின் சில பாடல் வரிகள் வெளியாகி ரசிகர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தி வருகிறது.

ஓரிரு தினங்களுக்கு முன் ‘செல்லக்குட்டி’ பாடலின் வரிகளை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டு இருந்தார்.

தற்போது மற்றொரு பாடலின் வரிகள் வெளியாகியுள்ளது. அருண்விஜய்குமார் எழுதி பாடிய ராப் பாடல் இது. “தோட்டா தெறிக்க தெறிக்க, வேட்ட வெடிக்க வெடிக்க, வர்றான் தெறி.. என்ற வரிகளுடன் இப்பாடல் தொடங்கும் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வருகிற 20ஆம் தேதி இப்படத்தின் பாடல்களை மிகப்பிரம்மாண்டமான முறையில் ஒரு பெரிய மைதானத்தில் வெளியிட போவதாக செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது இசை வெளியீட்டு விழாவை சென்னை சத்யம் திரையரங்கில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இவ்விழாவில் கலந்துகொள்ளும் விஐபிகள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

ரஜினி நடித்த, கோச்சடையான் மற்றும் லிங்கா ஆகிய படங்களின் பாடல்கள் வெளியீட்டும் விழாவும் சென்னை, சத்யம் திரையங்கில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.