‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் லாரன்ஸுடன் சத்யராஜ்!


‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் லாரன்ஸுடன் சத்யராஜ்!

‘காஞ்சனா 2’ என்ற பேய் ஹிட் படத்தை தொடர்ந்து வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்காக ‘நாகா’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என இரண்டு படங்களை இயக்கி நடிக்க ஒப்புக் கொண்டார் லாரன்ஸ்.

ஆனால் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற தலைப்பை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிக்கும் படத்திற்கு விட்டுக் கொடுத்துள்ளார் லாரன்ஸ். ஆனால் இப்படத்திலும் நாயகன் ராகவா லாரன்ஸ்தான். ஆனால் இப்படத்தின் கதை வேறு வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இதனிடையில் தெலுங்கில் கல்யாண் ராம் நடிப்பில் வெளியான படம் ‘பட்டாஸ்’ படத்தைதான் தமிழில் ரீமேக் செய்கிறார் ஆர்.பி.சௌத்ரி. ஜீவா நடித்த ‘சிங்கம் புலி’ படத்தை இயக்கிய சாய்ரமணி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் முக்கிய கேரக்டரில் சத்யராஜ் நடிக்கிறார். லாரன்சுக்கு இரண்டு ஜோடிகள் உள்ளதால் அதற்கான தேடுதல் வேட்டை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.

முன்னாள் நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையக்கும் இப்படத்தில் லாரன்ஸ் நேர்மையற்ற ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். இப்படம் ஒரு குறுகியகால தயாரிப்பு என்பதால் வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார் லாரன்ஸ் என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.