‘மொட்ட சிவா’வுடன் இணைந்த கட்டப்பா!


‘மொட்ட சிவா’வுடன் இணைந்த கட்டப்பா!

பேய் ஹிட்டடித்த ‘காஞ்சனா2’ படத்தை தொடர்ந்து அதிடியாய் ரெண்டு படங்களை அறிவித்தார் லாரன்ஸ்.

அதில் ஒன்றான ”மொட்ட சிவா கெட்டசிவா” படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் இதன் துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வேந்தர் மூவீஸ் மதன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, இசை அமைப்பாளர் அம்ரீஷ், ஸ்ரீமன், ஜித்தன் ரமேஷ், ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படப்பிடிப்பை சத்யராஜ் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். கோவை சரளா பெண் போலீசாக நடிக்க, காலேஜ் ஸ்டூடண்டாக லாரன்ஸ் நடித்த காட்சியைப் படமாக்கினார் இயக்குனர் சாய்ரமணி.

இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பட்டாஸ் படத்தின் ரீமேக் ஆகும். இதை தெலுங்கில் இயக்கியவர் லாரன்ஸேதான்.
தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து உருவாக்கி வருகின்றனர். இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.