களத்தூர் கண்ணம்மா முதல் சாவித்திரியின் வாழ்க்கை படம் வரை..!


களத்தூர் கண்ணம்மா முதல் சாவித்திரியின் வாழ்க்கை படம் வரை..!

நடிகர் திலகம் சிவாஜி என்றால், நடிகையர் திலகம் என அழைக்கப்பட்டவர் சாவித்திரி.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பலருடனும் நடித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள மொழிகளில் அதிக மொழிகளில் நடித்த நடிகை இவர்தான். 300க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

காதல் மன்னன் ஜெமினி கணேசனை 1952ஆம் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு இல்வாழ்க்கை இன்பமாக அமையவில்லை.

இந்நிலையில், திரையுலகில் பல சாதனைகளை படைத்த இவரது வாழ்க்கை தற்போது படமாக தயாராகவுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள இப்படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார்.

சாவித்திரி வேடத்தில் நடிக்கப் போகும் நடிகை யார்? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும்.

தெலுங்கில் ‘மஹாந்தி’ என்றும் தமிழில் மகாநதி என்றும் பெயரிடவுள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தில் சாவித்திரியும் நடித்திருந்தார்.

தற்போது கமல் நடித்த மகாநதி படத்தலைப்பு சாவித்திரியின் வாழ்க்கை படத் தலைப்பானது ஆச்சரியம்தான்.