சிம்புவின் ‘கான்’ நிறுத்தம்..? செல்வராகவன் விளக்கம்!


சிம்புவின் ‘கான்’ நிறுத்தம்..? செல்வராகவன் விளக்கம்!

‘வாலு’ படத்திற்கு பிறகு வரிசையாக புதிய படங்களை கமிட் செய்தார் சிம்பு. பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளுபடம் இன்னும் நிலுவையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து செல்வராகவனின் கான்’, கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா’ மற்றும் அமீரின் ‘மெர்சல்’ ஆகிய படங்களில் கமிட் ஆனார்.

இதில் செல்வராகவன் இயக்கிய ‘கான்’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே முடித்தார். எனவே படம் விரைவில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘கான்நிறுத்தப்பட்டு விட்டது என்று செய்திகள் வந்தது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குனர் செல்வராகவன் இப்படத்தின் அடுத்த கட்டப்படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் சிம்புவுடன் கேத்ரின் தெரசா, டாப்சி, ஜெகபதி பாபு முதலானோர் நடித்து வருகின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்திற்காக செல்வராகவனுடன் யுவன் ணைந்துள்ளார். இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.