மாஸ் ஹிட் கொடுக்க இணையும் செல்வா, கௌதம், எஸ் ஜே சூர்யா.!


மாஸ் ஹிட் கொடுக்க இணையும் செல்வா, கௌதம், எஸ் ஜே சூர்யா.!

செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் இருவரும் சிம்பு நடிக்கும் இரண்டு படங்களை இயக்கி வந்தனர். ஆனால் இந்த இருபடங்களும் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்திற்காக இணையவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. செல்வராகவன் சில நாட்களுக்கு முன் ஒரு பேய் கதையை உருவாக்கி வருவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

விரைவில் அப்படத்தை இயக்கவிருப்பதாகவும் அப்படத்தைதான் கௌதம் மேனன் தன் ஃபோட்டான் கத்தாஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் நாயகனாக எஸ் ஜே சூர்யா நடிக்கவுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல ஹிட் படங்களை கொடுத்த இந்த மூன்று இயக்குனர்களும் ஒரே படத்தில் இணைந்தால் அது நிச்சயம் ஒரு மாஸ் ஹிட்டாக அமையும் என்பதில் ஐயமில்லை தானே.