நெஞ்சம் மறப்பதில்லை… சூர்யாவுடன் இணையும் செல்வராகவன்..!


நெஞ்சம் மறப்பதில்லை… சூர்யாவுடன் இணையும் செல்வராகவன்..!

எவரும் எதிர்பாராத கூட்டணியாக எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் கூட்டணி அமைந்துள்ளது. செல்வராகவன் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக எஸ் ஜே சூர்யா நடிக்கவுள்ளார்.

இவருடன் ரெஜினா, நந்திதா ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவிருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தற்போது இதன் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் திகில் படம் என்பதால் அதற்கு பொருத்தமான பெயரை ஆராய்ந்து வருகிறார்களாம்.

புதிய பெயர் கிடைக்காவிட்டால் பழைய படத்தின் பெயரை சூட்ட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கிட்டதட்ட 50 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திகில் படமான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற பெயரை வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீதர் இயக்கிய இப்படத்தில் தேவிகா, நாகேஷ், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.