‘ப்ரேமம்’ ரீமேக்கில் விஜய்சேதுபதி வேண்டாம் என நினைக்கிறாரா செல்வராகவன்?


‘ப்ரேமம்’ ரீமேக்கில் விஜய்சேதுபதி வேண்டாம் என நினைக்கிறாரா செல்வராகவன்?

அல்போன்ஸ் புத்திரன் இயக்கி, நிவின்பாலி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்த படம் ‘ப்ரேமம்’. மலையாளத்தில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படம் வெளியாகி நான்கு மாதங்களை கடந்துவிட்ட போதிலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால் ‘பிரேமம் படத்தின் ரீமேக் உரிமைக்கு தமிழகத்தில் கடும் போட்டி நிலவ அதை தனுஷ் கைபற்றியதாக தெரிய வந்துள்ளது. இப்படத்தை தனுஷ் தயாரிக்க விஜய்சேதுபதி நடிக்கவிருந்தார். மேலும் இப்படத்தை செல்வராகவன் இயக்கக்கூடும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்இயக்குர் செல்வராகவன் தன் ட்விட்டரில் கூறியதாவது… ”நிவின் பாலியின் நடிப்பு அருமை. பழைய காதல் நினைவுகளில் அல்ஃபோன்ஸ் புத்திரன் மூழ்க செய்து விட்டார். இப்படத்தை ரீமேக் செய்ய வேண்டுமேன்றால் அவரே இயக்க வேண்டும். அவரால் மட்டுமே அந்த உணர்வுகளை கொண்டு வரமுடியும். வேறு யாரும் முயற்சி வேண்டாம். அதுபோல நிவின் பாலி கேரக்டரில் வேறு ஒருவரை நினைத்து பார்க்கமுடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார் செல்வராகவன்.