அன்று சிம்ரன்-ஜோதிகா ஜோடி; இன்று மூத்த நடிகையுடன் ஷாம்..!


அன்று சிம்ரன்-ஜோதிகா ஜோடி; இன்று மூத்த நடிகையுடன் ஷாம்..!

‘12B’ படத்தில் அறிமுகமான ஷாம், இன்று 25 படங்களை கடந்து விட்டார். தனது முதல் படத்திலேயே சிம்ரன் ஜோதிகாவுடன் ஜோடி போட்டவர் இவர். 2013 வருடம் இவர் தயாரித்து நடித்த ‘6’ படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. படத்திற்காக பல ரிஸ்க் எடுத்து உடல் இளைத்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அதன்பின்னரும் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கடந்த மே மாதம் இவரது நடிப்பில் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படம் வெளியானது. இதுவும் இவருக்கு நல்ல பெயரையே பெற்றுத் தந்துள்ளது. இவர் தற்போது ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் ‘ஒரு மெல்லிய கோடு ‘ ​ ​படத்தில் நடித்து வருகிறார். முக்கிய கேரக்டரில் அர்ஜுன் நடிக்க இளையராஜா இசையமைக்கிறார். தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ஷாமுக்கு ஜோடியாக இருவர் நடிக்கின்றனர். ஒருவர் மனீஷா கொய்ராலா இன்னொருவர் ஸ்ருதி ஹரிஹரன்.

சென்னை மற்றும் பெங்களூருவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ஷாமின் கேரக்டர் நெகட்டிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. க்ரைம் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்திற்காக மனீஷா கொய்ராலாவுடன் விரைவில் துருக்கி செல்ல இருக்கிறாராம் ஷாம்.

ரஜினி, கமலுடன் நடித்த மனீஷா கொய்ராலா இன்று ஷாமுடன் ஜோடியாக நடிக்கிறார். இவர் நடிகர் ஷாமை விட 6 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.