அஜித் மச்சினி ஷாம்லி அறிமுகமாகும் ‘வீர சிவாஜி’


அஜித் மச்சினி ஷாம்லி அறிமுகமாகும் ‘வீர சிவாஜி’

குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஷாம்லி. இவர் நடிகர் அஜித் மனைவி ஷாலினியின் தங்கை என்பது நாம் அறிந்ததே. இவர் கடந்த 2009ஆம் ஆண்டு சித்தார்த்துடன் ‘ஓய்’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன்பின்னர் படிப்பை தொடர்ந்து வந்த இவர் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் தன் திரைப்பயணத்தை தமிழில் தொடங்கியுள்ளார்.

விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் ‘வீர சிவாஜி’ என்ற படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் ரோபா சங்கர், ஜான்விஜய், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இமான் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேஷ் விநாயக் இயக்க நந்தகோபால் தயாரிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்புடன் இன்று பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, ஷாம்லி, ரோபா சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஷாம்லி கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்.

இதனைத் தொடர்ந்து ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார் ஷாம்லி. இதில் தனுஷ் இருவேடமேற்கிறார். இதில் தம்பி தனுஷூக்கு ஜோடியாக ஷாம்லி நடிக்கவிருக்கிறார். இதனை தனுஷே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.