‘எந்திரன் 2’ ஆரம்பம்… ரஜினி, ஷங்கரை வாழ்த்திய தனுஷ்!


‘எந்திரன் 2’ ஆரம்பம்… ரஜினி, ஷங்கரை வாழ்த்திய தனுஷ்!

ஏவிஎம் தயாரித்த ‘சிவாஜி’ படத்திற்காக முதன்முறையாக ரஜினிகாந்த் ஷங்கர் கூட்டணி இணைந்தது. இப்படத்தின் வெற்றி இவர்களை மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘எந்திரன்’ படத்திற்காக இணைய வைத்தது. இப்படமும் இமாலய வெற்றி பெறவே தற்போது ‘எந்திரன் 2’ படத்திற்காக இணைகின்றனர்.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கப்படவுள்ளதாக இயக்குனர் ஷங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதில் ‘வெர்ஷன் 2.0’ படப்பிடிப்பு நாளை முதல் தொடக்கம்.” என பதிவிட்டுள்ளார்.

ஷங்கரின் பதிவிற்கு பதிலளித்து நடிகர் தனுஷ் ட்வீட் செய்திருப்பதாவது.. “வாவ்…. இதை விட பெரிய மகிழ்ச்சியான செய்தி கிடைக்குமா?… ‘எந்திரன் 2’ குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

ரஜினி ஷங்கரின் ஹாட்ரிக் வெற்றி இன்று பிள்ளையார் சுழியுடன் ஆரம்பமாகியுள்ளதால் ரஜினி ரசிகர்கள் மிக உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த செய்தி ரஜினி பிறந்தநாள் (டிச. 12) அன்று வந்திருந்தால் இதைவிட அதிகமாகவே மகிழ்ந்திருப்போம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.