“இயக்குநர் சங்கரின் பாராட்டு; ரீ ரிலீஸ் திட்டம் போடும் படக்குழு!”


“இயக்குநர் சங்கரின் பாராட்டு; ரீ ரிலீஸ் திட்டம் போடும் படக்குழு!”

நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவான பிரேமம் கடந்த வருடம் மே 29ஆம் தேதி ரிலீஸானது.

அன்றுமுதல் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் 220 நாட்களைத் தாண்டி படம் வெற்றிகரமாக ஓடியது.

ஆனால் பொங்கல் தினத்தன்று ‘ரஜினி முருகன்’,’கதகளி’, ‘கெத்து’, ‘தாரை தப்பட்டை’ உள்ளிட்ட படங்கள் வெளியானதால் ‘பிரேமம்’ படத்தை திரையரங்குகளில் இருந்து தூக்கிவிட்டனர்.

ஆனால், பிரேமம் படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் மீண்டும் சென்னையில் திரையிட இருக்கிறார்களாம்.

சென்னை ரசிகர்களின் அன்பைக் கண்ட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று படம் பார்த்த இயக்குநர் சங்கர் செம படம் என பாராட்டியுள்ளார்.