13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கரின் ‘பாய்ஸ்’..!


13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கரின் ‘பாய்ஸ்’..!

ஜென்டில் மேன், இந்தியன், முதல்வன் என சமூக கருத்துக்களை கொண்ட படங்களை இயக்கிய ஷங்கர், முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாக்கிய படம் பாய்ஸ்

கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன், ஜெனிலியா, விவேக், புவனேஸ்வரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் புவனேஸ்வரி விலை மாதுவாக நடித்திருந்தார்.

பருவ வயதில் வாலிபர்கள் செய்யும் சில்மிஷங்கள் மற்றும் பெண்களின் மனநிலை ஆகியவற்றை அப்பட்டமாக காட்டியிருந்தார் இயக்குனர்.

இரண்டாம் பகுதியில் பாய்ஸ் அனைவரும் வாழ்வில் வெற்றிப் பெறுவதாக இயக்குனர் காண்பிருந்தாலும், ஷங்கரிடம் இருந்து இப்படியான ஒரு படத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என புகார்கள் எழுந்தன.

அதன்பிறகு அந்நியன், சிவாஜி, எந்திரன் என தன் பழைய ரூட்டுக்கே வந்து சேர்ந்தார் ஷங்கர்.

தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக அப்படத்தில் நடித்த இசையமைப்பாளர் தமன் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.