‘காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு’ -அட இதாங்க சிவா இயக்கும் புதுப்படம்.


‘காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு’  -அட இதாங்க சிவா இயக்கும் புதுப்படம்.

மிர்ச்சி சிவா என்றழைக்கப்படும் சிவா, வெங்கட்பிரபு இயக்கிய ’சென்னை 600028’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்படம் என்ற படத்தில் நடித்து தமிழ் கதாநாயகர்களை கலாய்த்தார். அதன்பிறகு வந்த படங்களில் இவருக்கு கலாய்க்கும் கேரக்டர்களே அமைந்தன.

இந்நிலையில் ’தில்லு முல்லு’ ‘கலகலப்பு’, மற்றும் ‘யா யா’, ’வணக்கம் சென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன்பின்னர் ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற படம் மூலம் வசனகர்த்தாவாக மாறினார். இந்தப்படத்தில் பாபி சிம்ஹா , கருணாகரன், விஜயலெட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.

தற்போது புது படமொன்றை இயக்க உள்ளார். ‘காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு’ என்று பெயரிடப்பட்ட இந்தப்படத்தை தானே இயக்கி நடிக்கவும் உள்ளார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.