விஜய் 61… ப்ரொட்யூசர் கன்பார்ம்… டைரக்டர் இவரா…?


விஜய் 61… ப்ரொட்யூசர் கன்பார்ம்… டைரக்டர் இவரா…?

தெறியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடைபெற்றது.

தற்போது கோடை விடுமுறையை தன் குடும்பத்துடன் செலவிட வெளிநாடு சென்றுள்ளார் விஜய்.

எனவே, அவர் திரும்பியவுடன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

இதனையடுத்து, விஜய் 61 படத்திற்கான தயாரிப்பாளரை விஜய் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபு தயாரிக்கிறாராம். இப்படத்தை அட்லி இயக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.. “விஜய் மற்றும் பிரபு இருவரும் இதுகுறித்து பேசியிருக்கிறார். ஆனால் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை” என தெரிவித்துள்ளனர்.