சூட்டிங்கிலே அப்ளாஸ் அள்ளிய புலி விஜய்


சூட்டிங்கிலே அப்ளாஸ் அள்ளிய புலி விஜய்

‘புலி வருது…… புலி வருது…’ என்ற கதையாக இல்லாமல் நிஜமாகவே இன்னும் சில தினங்களில் விஜய் நடித்துள்ள ‘புலி’ வெளியாகவுள்ளது. படத்திற்கான முன்பதிவுகள் சில தினங்களில் தொடங்கவுள்ளது. 2000 அரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படத்தை பற்றி எந்த செய்தி வெளியானாலும் அதையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

தற்போது வந்துள்ள செய்தி அவர்களை மேலும் உற்சாகமடைய செய்யும். இப்படத்தில் பணிபுரிந்த ஒருவர் படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடியான வாள் சண்டை குறித்து தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில்…

“ஒரு சண்டைக்காட்சிக்காக அமைக்கப்பட்ட மேடையின் விளிம்பில் ஆக்ரோஷமாக வாள் சண்டையிடவேண்டும். அப்போது விஜய் கீழே விழப்போவதும் பின் சுதாரித்து வாளின் நுனி பாகத்தால் தரையில் தாங்கி உடனே எழ வேண்டும். இதற்கு டூப் அல்லது விஜய்யை கயிறு கட்டி இழுக்க முடிவானது.

ஆனால் விஜய்யோ… ‘கயிறோ டூப்போ தேவையில்லை. நானே எழுந்துவிடுவேன் என்று கூறினார். சொன்னதுபோலவே ஒரே ஷாட்டில் அந்தக் காட்சியை ஓகே செய்தார். யுனிட்டில் இருந்த அனைவரும் அதிசயித்து மெய் மறந்து கைத்தட்டிக் கொண்டே இருந்தனர். விஜய் போதும் என்று கூறியும் கைத்தட்டல் நிறுத்த வெகு நேரம் ஆனது” என்றார்.

சூட்டிங்கே இப்படின்னா… ஸ்கீரின்ல இந்த காட்சிக்கு ரசிகர்களின் ரியாக்சன்..?