குறும்பட ஆர்வலர்களுக்கு சினிமா எடுக்க வாய்ப்பு…!


குறும்பட ஆர்வலர்களுக்கு சினிமா எடுக்க வாய்ப்பு…!

விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண்விஜய் நடித்த ஜனனம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரமேஷ் செல்வன். இவர் தற்போது ஒரு புதிய குறும்படத் திருவிழாவை நடத்துகிறார்.

இதில் கலந்து கொள்ளும் 100 படங்களிலிருந்து 10 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன. மத்திய மற்றும் மாநில அளவில் நடக்கும் குறும்பட விருது போட்டிகளுக்கும் அந்த படங்கள் அனுப்பி வைக்கப்படும்.

திரையரங்குகள் மற்றும் தொலைகாட்சிகளிலும் அந்த குறும்படங்களை வெளியிடப்படும் என தெரித்துள்ளார் இயக்குனர்.

மேலும், சிறந்த படங்களை எடுத்தவர்களுக்கு “ஸ்ரீ சாய்ராம் சினிமாஸ்” நிறுவனத்தால் திரைப்படம் எடுக்கும் வாய்ப்பும் வழங்கப்படவிருக்கிறதாம். இதற்கான ஒரு அமைப்பாக “சென்னை தமிழ் பிலிம் பேன்ஸ் சொசைட்டி” செயல்படும் என்றும் தெரிவித்தார் இயக்குநர் S.D.ரமேஷ் செல்வன்.