‘சிக்ஸ்பேக் சிங்கம்’ சூர்யாவுடன் இணையும் ஸ்ருதி!


‘சிக்ஸ்பேக் சிங்கம்’ சூர்யாவுடன் இணையும் ஸ்ருதி!

‘மாஸ்’ படத்தை தொடர்ந்து சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஹைக்கூ’ படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் குமார், பிந்து மாதவி, அமலாபால், முனீஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை சூர்யாவே தயாரித்துள்ளார்.

இதனையடுத்து தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் சமந்தா, அஜய், சத்யன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  வினோத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிக்கிறார்.

இதனை தொடர்ந்து மீண்டும் ஹரியுடன் இணையவுள்ளார் சூர்யா. இப்படம் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக உருவாக உள்ளது. இதில் சிபிஐ அதிகாரியாக நடிக்கும் சூர்யா, சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் தோன்றவுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.