சூர்யா-பவர் ஸ்டார் கூட்டணியில் இணைந்த ஸ்ருதிஹாசன்.!


சூர்யா-பவர் ஸ்டார் கூட்டணியில் இணைந்த ஸ்ருதிஹாசன்.!

விஜய் ஜோதிகா நடிப்பில் உருவான குஷி படத்தை இயக்கினார் எஸ் ஜே சூர்யா.

இப்படம் தமிழில் வெற்றி பெறவே, பவர்ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் பூமிகா நடிப்பில் தெலுங்கிலும் இயக்கினார்.

தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தெலுங்கில் இயக்குகிறார்.

இதன் பூஜை கடந்த 2016, ஏப்ரல் 27ஆம் தேதி போடப்பட்டது.

முதல் பாகத்தில் நடித்த பவன் கல்யாணே மீண்டும் நாயகனாக நடிக்கிறார். இவரின் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

2017ஆம் ஆண்டு சங்கராந்தி திருநாளில் இப்படத்தை திரைக்கு கொண்டு வரத்திட்டமிட்டு இருக்கிறாராம் இயக்குனர்.