படங்களில் நடிக்க ஸ்ருதிக்கு தடை; கோர்ட் அதிரடி தீர்ப்பு


படங்களில் நடிக்க ஸ்ருதிக்கு தடை; கோர்ட் அதிரடி தீர்ப்பு

தனி ஹீரோவாக வெற்றி கண்டு வந்த கார்த்தி முதன்முறையாக மற்றொரு ஹீரோவுடன் நடித்து வருகிறார். கார்த்தி மற்றும் நாகார்ஜுனா இணையும் படத்தை பிவிபி சினிமாஸ் தயாரித்து வருகிறது. இதில் கார்த்தி ஜோடியாக ஸ்ருதி நடிக்கவிருந்தார்.

பின்னர் அஜித்தின் ‘அச்சமில்லை’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் கார்த்தியை கழற்றி விட்டு விட்டார் என்பது தங்களுக்கு…… இதெல்லாம் எங்களுக்கு தெரிந்த செய்திதான். புதுசா ஏதாச்சும் சொல்ல சொல்றீங்களா? என்பவர்களுக்கு… சரி விஷயத்துக்கு வருகிறோம்.

இந்நிலையில் ஸ்ருதி விலகி விட்டதால் இவரது செயலை எதிர்த்து இப்பட நிறுவனம் ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…

‘ஸ்ருதிஹாசனுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அவரது தேதிகள் முடியவில்லை. பாதி படம் முடிந்து விட்ட நிலையில் கால்ஷீட் இல்லை; நடிக்க இயலாது என்று ஸ்ருதிஹாசன் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். இவரது இந்த செய்கையினால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்றவர்களின் வாங்கிய தேதிகளை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கான தீர்ப்பு வரும் வரை ஸ்ருதிஹாசன் மற்ற நிறுவன படங்களில் நடிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதனைக் ஏற்றுக்கொண்ட ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட் அதிரடி தடை விதித்துள்ளது. “இனி ஸ்ருதிஹாசன் ஒப்புக்கொண்டபடி படத்தை முடித்துக் கொடுப்பதற்கு முன் புதிய படங்களை ஒப்புக்கொள்ளக்கூடாது” எனக் கூறியுள்ளது.