‘புலி’ படத்திற்காக விஜய்யுடன் டூயட் பாடிய ஸ்ருதி!


‘புலி’ படத்திற்காக விஜய்யுடன் டூயட் பாடிய ஸ்ருதி!

‘புலி’ படத்தை முடித்து கொடுத்துவிட்டு அட்லி இயக்கும் படத்தில் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் இளையதளபதி விஜய். இதனிடையில் ‘புலி’ படத்தின் டீஸர் வெளியாகி சக்கை போடு போட்டது.

படப்பிடிப்பு முடிந்தும் டீஸரை தவிர வேறு எதுவும் வெளியாகவில்லை. படத்தின் பாடல்களும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதியே வெளியாகவுள்ளது. இவ்விழாவினை மிகப்பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ‘புலி’ படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன் பாடிய பெப்பியான பாடல் ஒன்றை பதிவு செய்துள்ளார். இப்பாடல் சமீபத்தில் வெளியான ‘செல்பி புள்ள…’ பாடல் போல செம் ஹிட்டடிக்கும் என்கின்றனர். இது விஜய் ரசிகர்களுக்கு ஸ்ருதி விஜய்யுடன் இணைந்து தரும் விருந்து என்றும் தெரிவித்தனர் படக்குழுவினர்.

சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நந்திதா, ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், சத்யன், கருணாஸ், தம்பி ராமையா, விஜயகுமார், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, பி.டி.செல்வகுமார் மற்றும் தமீம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று ‘புலி’ பாய தயாராகவுள்ளது.