கார்த்தி படத்தில் ஐட்டம் பாட்டுக்கு ஆடும் ஸ்ருதி!


கார்த்தி படத்தில் ஐட்டம் பாட்டுக்கு ஆடும் ஸ்ருதி!

உலகநாயகனின் மகள் என்ற அடையாளத்தையும் தாண்டி தனக்கென ஒரு அடையாளத்துடன் இந்திய திரையுலகை கலக்கி வருபவர் ஸ்ருதிஹாசன். கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது ஆந்திரா முதல் ஆக்ரா வரை சென்று வருகிறார்.

சமீபத்தில் விஜய்யுடன் இவர் நடித்த ‘புலி’ படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து அஜித்துடன் நடித்த ‘வேதாளம்’ தீபாவளி திருநாளில் திரைக்கு வரவிருக்கிறது. விரைவில் ஹரி இயக்கும் ‘சிங்கம் 3’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

இதனிடையில் ‘திவார்’, ‘ஆகடு’ ஆகிய படங்களில் ஐட்டம் பாட்டுக்கு ஆடிய ஸ்ருதிஹாசனுக்கு தற்போது அதுபோன்ற பாடல்களின் வாய்ப்பு வரிசையாக வருகிறதாம். எனவே இதனைத் தொடர்ந்து கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘தோழா’ படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடவிருக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, அலி ஆகியோரும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் அனுஷ்கா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாராம். பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை வம்சி பைடிபல்லி என்பவர் இயக்கி வருகிறார்.