சிம்பு-நயன்தாரா மோதல்? நடுவில் ஸ்ருதி …?


சிம்பு-நயன்தாரா மோதல்? நடுவில் ஸ்ருதி …?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்து நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள படம் ‘இது நம்ம ஆளு’.

இப்படத்தின் பாடல்கள் நாளை மறுநாள் அதாவது சிம்பு பிறந்தநாளில் (பிப்ரவரி 3ஆம் தேதி) வெளியாகவிருக்கிறது.

இதற்கான விளம்பரங்களில் நயன்தாராவின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. மாறாக ஆண்ட்ரியாவுடன் சிம்பு இருக்கும் டிசைன்களே அதிகம் இடம் பெற்று வருகிறது.

இதற்கான காரணம் என்னவென்றால்… இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டாலும் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படவுள்ளதாம். இந்த பாடலில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டாராம்.

இயக்குனர் பாண்டிராஜோ படத்திற்கு அந்தப் பாட்டே தேவையில்லை என்ற முடிவிலிருந்தாலும் இசை குறளரசனாச்சே தயாரிப்பாளர் விடமாட்டார் என்பதால் நயனோ ஸ்ருதியோ கொடுங்க எடுத்து தொலைப்போம் என தலையாட்டி வைத்துள்ளார்.

எனவே அவருக்கு பதிலாக ஸ்ருதிஹாசனை ஆட வைக்கலாமா? என்று தீவிர யோசனையில் இருக்கிறதாம் சிம்பு தரப்பு.

ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது.

எனவேதான் நயன்தாரா ஸ்டில்கள் போஸ்டரில் இடம்பெறவில்லை என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.