‘மருதநாயகம் எங்கள் குடும்பத்தில் ஒருவர்…’ – ஸ்ருதிஹாசன்..!


‘மருதநாயகம் எங்கள் குடும்பத்தில் ஒருவர்…’ – ஸ்ருதிஹாசன்..!

அஜித்துடன் வேதாளம், விஜய்யுடன் புலி, ஆகியவற்றை தொடர்ந்து தற்போது சூர்யாவுடன் எஸ் 3 படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

தற்போது பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து, தன் தந்தை கமல்ஹாசன் உடன் ராஜீவ் குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் கனவுப்படமான மருதநாயகம் படத்திலும் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றன.

இதுகுறித்து ஸ்ருதி கூறியதாவது…

மருதநாயகம் கேரக்டர் அப்பா காட்டிவரும் அர்ப்பணிப்பை சின்ன வயசுலே இருந்தே பார்த்து வருகிறேன். கிட்டதட்ட மருதநாயகமும் எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல ஆகிவிட்டார்.

அப்படத்திற்காக அப்பா மேற்கொண்ட ஒவ்வொன்றும் ஆச்சரியம் நிறைந்தது. அப்படியான படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், அது என் பாக்கியம்” என்றார்.