கலங்கி நிற்கும் ஸ்ருதி.. கைகொடுக்குமா ஹரி படம்..??


கலங்கி நிற்கும் ஸ்ருதி.. கைகொடுக்குமா ஹரி படம்..??

ஹீரோவுடன் வெறும் டூயட் பாடினா சரிவராது… ஏதாச்சும் வித்தியாசமா பண்ணினால்தான் கொஞ்சம் திறம காட்ட முடியும்னு தீர்மானிச்சிருக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.

அதனாலதான் அஜித்தோட ‘வேதாளம்’ படத்துல வக்கீல் கேரக்டரை செலக்ட் பண்ணி இருந்தாராம். அதுசரி.. அதுல என்ன கோர்ட்டுக்கு போய் வாதாடினாரா? அப்படியெல்லாம் நீங்க கேட்கக்கூடாது. கவர்ச்சியா நடித்திருந்தாரே அதுபோதாதா? என்ற லெவலுக்குத்தான் அவரது ஹிட் ராசி ஒர்க் அவுட் ஆகியிருந்தது.

சரி. விஷயத்துக்கு வருவோம். இப்போ ஹரி இயக்குற ‘சிங்கம் 3’ படத்துல சூர்யாவோட நடிக்கவிருக்கிறார் ஸ்ருதி. இதுல சூர்யாவுடன் இணைந்து சிஐடியாக நடிக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.

இவ்ளோநாளா வெறும் லவ் மட்டும் பண்ணிட்டு இருந்த சூர்யா, அனுஷ்கா ஜோடி இந்த மூன்றாவது பாகத்துல கணவன்-மனைவியாக ஜோடி சேரப் போறாங்க.

இதன் படப்பிடிப்பை கொல்கத்தாவில் நடத்த திட்டமிட்டு இருந்தார் ஹரி. ஆனால் அங்கேயும் மழை கொட்டித் தீர்த்து வருவதால் கொஞ்சம் லேட்டா ஸ்டார்ட் பண்ணிக்கலாம் என முடிவில் இருக்கிறார்களாம் ‘சிங்கம் 3’ படக்குழுவினர்.

இப்போது முழுக்க முழுக்க ஹரி படத்தை மட்டுமே நம்பி நிற்கிறார்.

ஸ்ருதி.. கைகொடுக்குமா ஹரி படம்..??