சித்தார்த்தின் ‘அரண்மனை’யில் மூன்று பேரழகிகள்!


சித்தார்த்தின் ‘அரண்மனை’யில் மூன்று பேரழகிகள்!

‘ஜிகர்தண்டா’, ‘காவியத் தலைவன்’, ‘எனக்குள் ஒருவன்’ போன்ற படங்களை தொடர்ந்து தமிழில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். இந்நிலையில் இவர் ஏற்கெனவே இயக்குனர் சுந்தர் .சியுடன் ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தார்.

தற்போது ‘அரண்மனை 2′ படத்திற்காக மீண்டும் சுந்தருடன் இணையவுள்ளார் சித்தார்த். இவரின் அரண்மனையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகள் 3 பேர் இணையவுள்ளனர். த்ரிஷா, அஞ்சலி மற்றும் காஜல் இவர்கள் மூவரும் இணையவுள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூரியும் நடிக்கிறார். மேலும் இப்படத்தை குஷ்பூ சுந்தரின் ‘அவ்னி சினிமேக்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

சித்தார்த்தும் த்ரிஷாவும் இதற்கு முன்பே மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’ படத்தில் இணைந்துள்ளனர். சுந்தரும் அஞ்சலியும் ‘கலகலப்பு’ படத்திற்காக இணைந்து பணியாற்றினர். ஆனால் சுந்தர் .சி-த்ரிஷா-சூரி-காஜல் கூட்டணி அமைப்பது இதுவே முதல் முறை.

ஆக மொத்தத்தில் இந்த அரண்மனையின் அந்தபுரத்தில் அழகிகளின் ராஜ்ஜியம் நிச்சயம்தான்.