‘ஹீரோயின் வேண்டாம்… வரிவிலக்கு வேண்டாம்…’ – கெத்து காட்டும் சித்தார்த்..!


‘ஹீரோயின் வேண்டாம்… வரிவிலக்கு வேண்டாம்…’ – கெத்து காட்டும் சித்தார்த்..!

அரண்மனை 2 படத்தை தொடர்ந்து சித்தார்த் நடித்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ள படம் ‘ஜில் ஜங் ஜக்’. குறும்பட இயக்குனர் தீரஜ் இயக்கியிருக்கும் இப்படத்தை சித்தார்த்தே தயாரித்து இருக்கிறார்.

இதில் நாசர், ராதாதவி, ஆர் ஜே பாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர். காதலர் தினத்தில் இப்படம் வெளியாகிறது. இப்படம் தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து சித்தார்த் பேசியதாவது….

‘‘இப்படத்தின் பெயர் ‘ஜில் ஜங் ஜக்’. இது தமிழ் வார்த்தை இல்லை என்பது எனக்குத் தெரியும். அதனால் வரிவிலக்கு கிடைக்காது. எனவே அதற்கு விண்ணப்பிக்கவும் இல்லை.

இப்படத்திற்கு இப்படி பெயர் வைக்க காரணம் இதில் வரும் முக்கியமான மூன்று கேரக்டர்களே. அவர்களின் பெயர்களே இப்படத்தின் தலைப்பு.

ஆனால் இதில் ஹீரோயின் இல்லை. என்னது? ஹீரோயின் இல்லாமல் படமா? என்று நிறைய பேர் கேட்டார்கள்.

ஒருவேளை இதில் நான் ஹீரோயின் கேரக்டரை திணித்தால், இந்த கதைக்கு நான் செய்யும் துரோகம் அது. ஹீரோயின் இல்லாத குறை தெரியாத அளவுக்கு படத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது.

டெக்னாலஜியையும் பயன்படுத்தியிருக்கிறோம். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இது அமையும்.

நல்ல திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நானே இப்படத்தை தயாரித்து இருக்கிறேன். அதில் ஒரு ஒரு சுயநலமும் உள்ளது. என் கேரக்டருக்கான கதையை நானே செலக்ட் செய்து தயாரிப்பது ஈஸியாக இருக்கிறது.

இதனால் தொடர்ந்து படங்களை தயாரிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்று பேசினார் சித்தார்த்.