உனக்கு என்னடா அருகதை இருக்கு….’ விஷாலை சீண்டிய சிம்பு!


உனக்கு என்னடா அருகதை இருக்கு….’ விஷாலை சீண்டிய சிம்பு!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்காக அரசியல்வாதிகளை மிஞ்சிவிடும் அளவில் இரு அணியினரும் காரசாரமாக பேசி வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சரத்குமார் அணி சார்பாக ராதிகா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சிம்பு, ஊர்வசி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது சிம்பு பேசியதாவது…

“விஷால் நட்சத்திர கிரிக்கெட் அணியில் பங்கேற்றபோது அவரை கேப்டன் என்று அழைத்தனர். எனவே தானும் கேப்டன் விஜய்காந்த் போல் உருவாகிவிடலாம் என கனவு காண்கிறார் போல. டேய்… அவரு எங்க இருக்காரு? நீ எங்க இருக்க? அவருடைய உழைப்பு என்ன? எத்தனை படங்கள்? எத்தனை கஷ்டங்கள் பட்டு இருப்பாரு? உன்னால் முடியுமா? இளைஞர்களை மதிக்க தெரிந்தவர்கள் அவர்கள்.

நான் 1 வயது முதலே நடித்து வருகிறேன். நடிகர் சங்கத்தில் இருக்கிறேன். ஆனால் திடீரென்னு வந்த ஒருவன் எப்படி கேள்வி கேட்கலாம்? யாருடா நீ.. உனக்கு என்ன அருகதை இருக்கிறது கேள்வி கேட்க? நீ கேட்டா சொல்லனுமா? நீ யாருடா முதல்ல.. உனக்கு பதில் சொல்ல (என்று ஒருமையில் பேசினார் சிம்பு)

மேலும் தொடர்ந்து பேசியதாவது… விஜயகாந்த், சரத்குமார், ராதாதவி உள்ளிட்டோர் கஷ்டப்பட்டு ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். இதில் பிளவு ஏற்படுத்த நினைக்கும் எவனையும் பார்த்து கொண்டு சிலம்பரசன் சும்மா இருக்க மாட்டான்” என்று கடும் ஆவேசத்துடன் பேசினார் சிம்பு.

ஆனால் சிம்புவின் இந்த பேச்சு பற்றிய எந்தவொரு கேள்விக்கும் விஷால் பதிலளிக்கவில்லை. ஆனால் “நான் நடிகன். உறுப்பினர் கார்டு இருக்கிறது. எனவே தேர்தலில் நிற்கிறேன். வேறு எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை” என்று மட்டும் கூறினார்.