அமீர் இயக்கத்தில் கிராமத்து நாயகனாக ‘வாலு’ சிம்பு!


அமீர் இயக்கத்தில் கிராமத்து நாயகனாக ‘வாலு’ சிம்பு!

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான்’ பட இசை வெளியீட்டு விழாவில் சிம்பு கலந்து கொண்டார். அதில் பேசிய அவர் “இரண்டு வருடமாக என் படங்கள் வெளிவராததால் என்னிடம் எதுவும் இல்லை. காதலித்த பெண்ணும் சென்றுவிட்டாள். எல்லாம் இழந்து நிற்கிறேன்” என்று பேசினார். இவ்வாறாக கூறிய அவரிடம் தற்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாம்.

தற்போது திரையுலகில் நுழைந்தவரெல்லாம் எங்கோ சென்று கொண்டிருக்க குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றும் அதே இடத்தில் இருக்கிறோம். இனி எதற்காகவும் தாமதிக்க கூடாது என்று முடிவெடுத்த சிம்பு தற்போது பெரிய இயக்குனர்களை தேர்ந்தெடுத்து அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வருகிறார்.

தற்போது கௌதம் மேனனுடன் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திலும் செல்வராகவன் இயக்கத்தில் ‘கான்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் லட்சுமிமேனன் ஜோடியாக ஒரு படம் என ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமீர் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். பருத்தி வீரன் போல ஒரு பக்கா கிராமத்து கதையாம் இது. பண்ணையாரும் பத்மினியும் படத்தைத் தயாரித்த மேஜிக் பாக்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

சிம்பு ஒரு முழு கிராமத்து கதையில் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.