சேற்றிலும் முளைத்த ஹேஷ்டேக்; சிம்புவுக்கு கிடைத்த சின்ன ஆறுதல்??


சேற்றிலும் முளைத்த ஹேஷ்டேக்; சிம்புவுக்கு கிடைத்த சின்ன ஆறுதல்??

ஒரு பக்கம், பீப் சாங் சர்ச்சையால் சிம்பு மீது சேற்றை வாரி இறைக்காத குறையாக பல போராட்டங்கள் நடந்து வருகிறது. இருந்தபோதிலும் சிம்புவுக்காக இரண்டு ரசிகர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

சில மாதங்களுக்கு முன் ட்விட்டரில் பரபரப்பாக இயங்கிய சிம்பு திடீரென விலகினார். பின்னர் ரசிகர்களுக்காக மீண்டும் ட்விட்டரில் (ADMIN) தனது 2 வது கணக்கைத் தொடங்கினார்.

ட்விட்டர் கணக்கைத் தொடங்கிய வெகுசில நாட்களிலேயே 10 லட்சம் ஃபாலோயர்களை சிம்பு எட்டியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து சிம்பு கூறியதாவது… “என்னை ஃபாலோ செய்பவர்கள், ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமாவை நேசிப்பவர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை” என்று பதிவிட்டுள்ளார் சிம்பு.

எனவே, #1MFollowersForSTR என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர் சிம்பு ரசிகர்கள்.