பொங்கலுக்கு சிவகார்த்திகேயனுடன் இணையும் தனுஷ்-சிம்பு!


பொங்கலுக்கு சிவகார்த்திகேயனுடன் இணையும் தனுஷ்-சிம்பு!

பல கட்டங்களைத் தாண்டி, பல்வேறு பிரச்சினைகளிலிருந்து மீண்டு பொங்கல் தினத்தில் வருகிறான் ‘ரஜினிமுருகன்’. இதனால் இப்படத்தை வரவேற்க சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆயுத்தமாகி வருகின்றனர். இப்படத்தை பென் என்ற பிரபல வடஇந்திய நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

இதே தினத்தில் தன் ரசிகர்களுக்கும் விருந்து தரவிருக்கிறார் தனுஷ். பிரபு சாலமனுடன் இவர் இணைந்துள்ள படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. எனவே, பொங்கல் தினத்தில் இப்படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிடவுள்ளனர்.

இவர்களுடன் தற்போது சிம்புவும் இணைந்து பொங்கலுக்கு வருகிறாராம். கௌதம்மேன்ன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ட்ரைலரை புத்தாண்டு தினத்தில் வெளியிட்டனர். தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தள்ளிக் போகாதே…’ பாடலை மட்டும் பொங்கல் தினத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.