கௌதம் மேனனுக்காக இணையும் சிம்பு-தனுஷ்..!


கௌதம் மேனனுக்காக இணையும் சிம்பு-தனுஷ்..!

பிரபு சாலமனின் தொடரி மற்றும் துரை செந்தில்குமாரின் கொடி ஆகிய படங்களை முடித்து விட்டு கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இதில் தனுஷ் உடன் ‘பாகுபலி’ புகழ் ராணா மற்றும் ‘ஒரு பக்க கதை’ படத்தின் நாயகி மேகா ஆகாஷ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடங்குவதற்கு முன்பே சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தையும் இயக்கி வந்தார் கௌதம்.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் பாடல் காட்சிகளுக்காக துருக்கி நாடுக்கு செல்லவிருக்கிறாராம் கௌதம்.

எனவே, தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் அழைத்துச் சென்று அங்கு இரண்டு படங்களுக்குமான பாடல்களை படம்பிடிக்க இருக்கிறார்.