ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு…


ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு…

தனது குழந்தை பருவத்திலேயே சினிமா பயணத்தை துவங்கியவர் சிம்பு. இன்று அவர் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே, திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய நாள் தொடங்கிய நேரத்தில் சரியாக 12 மணிக்கு சிம்பு வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

எனவே மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார் சிம்பு.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

இன்று இப்படத்தின் பாடல்களை வெளியிடுகின்றனர்.

இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

சிம்பு அவர்களுக்கு சினி காஃபி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!