டாப் ஹீரோக்களுக்கு சிம்பு விட்ட சேலஞ்ச்…!


டாப் ஹீரோக்களுக்கு சிம்பு விட்ட சேலஞ்ச்…!

முன்பு சிம்பு படங்கள் ரிலீஸ் ஆவதில் பிரச்சினை என்றால், தற்போது சிம்பு படங்கள் உருவாகும் போதே பிரச்சினைகள் எழத் தொடங்கியுள்ளது.

செல்வராகவன் இயக்கிய கான் என்னவானது என்பது யாருக்குமே தெரியாத நிலையில், இது நம்ம ஆளு படத்திற்கும் உருவாகும்போதே பிரச்சினைகள் எழுந்தது.

இப்படத்தில் ‘மாமன் வெயிட்டிங்’ என்ற ஒரு பாடல் படமாக்கப்படாமல் நீடித்து வந்தது.

படத்தின் நாயகி நயன்தாரா ஆடாமல் மறுக்கவே, அஷா ஷர்மாவை வைத்து இப்பாடல் முடித்துள்ளனர். இப்பாடலின் டான்ஸ் மாஸ்டர் சதீஷ்.

இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் நடந்தது.

இப்பாடலில் எந்த நடிகரும் செய்யாததை சிம்பு செய்துள்ளாராம். தொடர்ச்சியாக 70 வினாடிகள் ஒரே காலில் நடனம் ஆடியிருக்கிறாராம்.

இப்பாடலின் சூட்டிங் விடிய விடிய நடைபெற்றுள்ளது.

இந்நடனத்தை பார்த்த சிலர், இந்த டான்ஸ் மூலம் டாப் ஹீரோக்களுக்கு சவால் விட்டுள்ளார் சிம்பு என்று தெரிவித்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் சிம்புவின் சேல்ஞ்சை யார் முறியடிப்பார் என்பதை பார்ப்போம்…?