‘வாலு’ வராததால் சிம்பு ரசிகர்கள் தற்கொலை முயற்சி!


‘வாலு’ வராததால் சிம்பு ரசிகர்கள் தற்கொலை முயற்சி!

ரம்ஜான் ஸ்பெஷல் விருந்தாக கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட டாப் ஸ்டார்களின் படங்கள் வெளியாகவிருந்தது. ஆனால் கமல் முந்திக்கொண்டு ‘பாபநாசம்’ படத்தை வெளியிட்டார். சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ பண நெருக்கடியால் பின்வாங்கிவிட்டார். ‘மாரி’ தனுஷ் தனியாக களம் இறங்குகிறார்.

அப்படியென்றால் சிம்புவின் ‘வாலு’…. இதற்கான விடை இதுவரை எவருக்கும் தெரியாது. எப்போதும் வெளியாகும் என உறுதியாக எதுவும் சொல்ல இயலாத நிலையில் உள்ளனர். ‘வாலு’ படத்திற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தது மேஜிக் ரேஸ் நிறுவனம். வழக்கு தள்ளிப்போகவே மேலும் ஆறு வழக்குகள் இப்படத்திற்கு தடை கேட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்நிலையில் சிம்புவின் ‘வாலு’ ரிலீஸாகததால் இரண்டு ரசிகர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளது. இதற்கு நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில்.. “ஏற்கனவே நான் உடைந்து போயிருக்கிறேன். என் பலமாகிய ரசிகர்கள் இப்படி செய்து என்னை காயப்படுத்தாதீர்கள்.. ப்ளீஸ்…” எனத் தெரிவித்துள்ளார்

எக்ஸ்ட்ரா டிப்ஸ் : யாரை நினைத்து இதை சிம்பு ட்வீட் செய்தாரோ தெரியவில்லை… நீங்களே யூகித்து கொள்ளுங்கள்…”நான் ஒன்றை சொல்லி அது சரியாகவோ, அல்லது தவறாகவோ எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கலாம். ஆனால் தற்போது ஒன்றை சொல்கிறேன். நான் மன்னித்துவிட்டேன்… ஆனால் மறக்க மாட்டேன். கடவுள் ஆசீர்வதிப்பார்” எனத் தெரிவித்துள்ளார் சிம்பு.