வலுக்கிறது எதிர்ப்பு; சிம்பு ரசிகர்கள் தீக்குளிக்க முயற்சி!


வலுக்கிறது எதிர்ப்பு; சிம்பு ரசிகர்கள் தீக்குளிக்க முயற்சி!

சிம்பு பாடிய பீப் பாடலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பல வழக்குகள் அவர் மீது பதிவாகி வருகிறது.

இன்று காலை நிருபர் பிஸ்மி பொதுநல வழக்கு ஒன்றை சிம்பு மீதும் அனிருத் மீதும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளார். வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க… சிம்புவின் ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சிம்பு அனுமதியில்லாமல் அப்பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இதுபோன்ற இதைவிட மோசமான பாடல்கள் இதுவரை சினிமாக்களில் வரவில்லையா?

அப்போது மௌனம் காத்து வந்த நீங்கள் இப்போது சிம்புவை மட்டுமே ஏன் டார்கெட் செய்கிறீர்கள் எனவும் கேட்டு வருகின்றனர். இதற்கு ஒரு படி மேலே சென்ற சிம்புவின் ரசிகர்கள் இருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளனர்.

தினந்தோறும் தி. நகரில் உள்ள சிம்புவின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சிம்பு ரசிகர்கள் ஒன்றாக கூடினர். அவர்கள் சிம்புவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். எதிர்பாராத வகையில், இரண்டு ரசிகர்கள் தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கே குவிக்கப்பட்டிருந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களை விசாரித்ததில்.. ஒருவர் வேலூரை சேர்ந்த மதன் என்றும் மற்றொருவர் மயிலாடுதுறையை சேர்ந்த பிரகாஷ் என்றும் தெரியவந்துள்ளது.