விக்ரம், அனுஷ்கா வழியில் சிம்பு…!


விக்ரம், அனுஷ்கா வழியில் சிம்பு…!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள இது நம்ம ஆளு விரைவில் வெளியாகவிருக்கிறது என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறார் சிம்பு.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இவருடன் மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.

சிம்புவுக்கு மேக்கப் போட ஹாலிவுட் கலைஞர் சீன் புட் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.

இப்படத்தின் ஒரு கேரக்டருக்காக தன் உடல் எடையை 90 கிலோவாக மாற்றவிருக்கிறாராம் சிம்பு. அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் தனது உடல் எடையை குறைத்து ‘வாலு’ இயக்குனர் விஜய் சந்தர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு

விக்ரம் தனது ஒவ்வொரு படத்திலும் உடல் எடையை சர்வ சாதாரணமாக மாற்றுபவர். இவரைப் போல், அனுஷ்காவும் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது அழகு உடலை 90 கிலோவுக்கு மேல் ஏற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் சிம்பு இணைந்துள்ளதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என கூறுகின்றனர் கோலிவுட் புள்ளிகள்.