வாலு பார்த்தவுடன் ரஜினியிடம் ஆசிபெற்ற சிம்பு!


வாலு பார்த்தவுடன் ரஜினியிடம் ஆசிபெற்ற சிம்பு!

மூன்றாண்டுகளுக்குப் பிறகு சிம்பு நடித்த ‘வாலு’ படம் இன்று வெளியானது. முதல் காட்சி சில திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சென்னையிலுள்ள காசி திரையரங்கில் ‘வாலு’ படத்தை ரசிகர்களுடன் பார்த்துள்ளார் சிம்பு. அதன்பின்னர் நேராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க சென்றுள்ளார். ரஜினியை சந்தித்து பேசிய அவர் அதன்பின்னர் இச்சந்திப்பு குறித்து தன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில்.. “நம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தேன். அவரிடம் ஆசிபெற்றேன். இந்த இக்கட்டான தருணத்தில் மாபெரும் கலைஞனிடம் ஆசி பெற்றதை பெருமையாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் ரஜினி படம் அருகில் “போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்” என புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.