ஓட்டு பாட்டிலும் கமல், அஜித்தை கௌரவப்படுத்திய சிம்பு..!


ஓட்டு பாட்டிலும் கமல், அஜித்தை கௌரவப்படுத்திய சிம்பு..!

பீப் பாடல் சர்ச்சைகளால் உடைந்து போன சிம்பு, தற்போது நாட்டுக்காக போட்ட ஓட்டு பாட்டு மூலம் தன் இமேஜ்ஜை உயர்த்தியுள்ளார்.

சில தினங்களுக்குமுன் இப்பாடல் வரிகளை வெளியிட்டாலும், தற்போது அந்த பாடல் வரிகள் அடங்கிய வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இப்பாடலை சிம்புவே எழுதி மெட்டு அமைத்துள்ளார். இவருடன் நடிகர் விடிவி கணேஷ் இணைந்து பாடியுள்ளார்.

இந்த பாடல் திரையில் தோன்றும்போது அதற்கான டிசைன் தெரிகிறது. அதில் பொதுமக்களின் பல முகங்கள் இருந்தாலும், முக்கியமாக கமல், கௌதமி, அஜித், த்ரிஷா ஆகியோரது முகங்கள் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பதால் அதே டிசைனில் மற்றொரு புகைப்படத்தில் அஜித்தும் ஷாலினியும் வாக்களிக்க நிற்பது போன்ற படத்தையும் வெளியிட்டுள்ளார்.