எல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..!


எல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..!

நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு நடிப்பில் எந்த வம்பும் இல்லாமல் இது நம்ம ஆளு படம் இன்று ரிலீஸ் ஆனது.

காதலர்களிடையே இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பெரும்பாலான காட்சிகளின் இன்றைய டாப் ஹீரோக்கள் பற்றிய ஒரு சில விஷயங்களை வைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களையும் சிம்பு வளைத்துள்ளார்.

ஒரு காட்சியில் நயன்தாரா, உங்களுக்கு யார ரொம்ப பிடிக்கும்? என்பார். அதற்கு என் அப்பா, அப்புறம் அஜித் என்று பதிலளிப்பார் சிம்பு.

இது இல்லாமல், அடிக்கடி தெறி படத்தில் உள்ள ஜித்து ஜில்லாடி என்ற பாடல் ரிங் டோன்களை கேட்க முடிந்தது.

தள்ளிப் போகாதே பாடலும் அடிக்கடி ஒலிக்கிறது

இவையில்லாமல் கபாலி டீசரின் மாஸான ரிங் டோன் சவுண்ட்டும் இருந்தது.

மேலும் சில காட்சிகளில் ஆர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் பெயரையும் பயன்படுத்தியுள்ளனர்.