சிம்பு ரசிகர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி..!


சிம்பு ரசிகர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி..!

பீப் பாடல் விவகாரத்தால் சிம்புவும் அவரது ரசிகர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தனர்.

இந்த சர்ச்சையால் ஒரு ரசிகர் தீக்குளிக்கவும் முயன்றார்.

ஆனால், அதன்பின்னர் வெளியான சிம்புவின் புதிய பட ஒப்பந்த அறிவிப்புகளால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில் வாலு படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தப் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.

கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் பாடல்கள் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வெளியாகவுள்ளது.

இதனிடையில் தள்ளிப்போகாதே பாடலை தொடர்ந்து மற்றொரு பாடலின் டிராக்கையும் விரைவில் வெளியிடவிருக்கிறார்களாம்.