தொடரும் பீப் விவகாரம்… ஆஜராகாமல் இழுத்தடிக்கும் சிம்பு…?


தொடரும் பீப் விவகாரம்… ஆஜராகாமல் இழுத்தடிக்கும் சிம்பு…?

சிம்பு பாடி, இணையத்தில் யாரோ வெளிட்ட பீப் பாடல் பல எதிர்ப்புகளை எதிர்க் கொண்டது. இதனால் சிம்பு மீது சென்னை மற்றும் கோவை நகரங்களில் பல்வேறு வழக்குகள் பதிவான நிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

இதனால் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் சிம்பு மனு தாக்கல் செய்திருந்தார். சிம்பு மீது பதிவான வழக்குகளில் அவர் எளிதாக ஜாமீனில் வரக்கூடும் என்பதால், மனுவை முடித்து வைத்து நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

மேலும் வழக்கு விசாரணைக்கு சிம்பு ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஜன. 29ஆம் தேதி போலீசார் முன்பு ஆஜராகவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஒரே குற்றத்துக்காக இரண்டு வழக்குகள் இரு மாநகரங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏதாவது ஒரு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராக கால அவகாசம் வேண்டும் என்று சிம்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.