வம்பு வேண்டாம்; ‘வாலு’ படத்தை வெளியிட சிம்பு முடிவு!


வம்பு வேண்டாம்; ‘வாலு’ படத்தை வெளியிட சிம்பு முடிவு!

2012ஆம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ படத்திற்கு பிறகு சிம்பு நடித்து எந்த படங்களும் வெளிவரவில்லை. இந்த இரண்டு வருடங்களில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘இங்க என்ன சொல்லுது’ போன்ற படங்களில் நட்புக்காக கௌரவ வேடத்தில் தோன்றினார்.

தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ள ‘வாலு’ படம்… இதோ வருகிறது… அதோ வருகிறது… என்ற கதையாக ‘வாலு’ போல நீண்டுக் கொண்டே போகிறது. இப்படத்தில் சிம்புவுடன் ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், ‘ஆடுகளம்’ நரேன், மந்த்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை விஜய் சந்தர் இயக்கியிருக்கிறார். ஷக்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார்.

இந்நிலையில் பல்வேறு பிரச்சினைகள் இப்படம் வெளியாகவில்லை. இனியும் காத்திருக்க முடியாது என்ற முடிவு எடுத்த சிம்பு ‘வாலு’ திரைப்படத்தை வாங்கியிருக்கிறாராம். தன் குடும்பத்து சொந்த தயாரிப்பு நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் படத்தை வெளியிடயிருக்கிறார்.

எனவே மே மாதத்திற்குள் ‘வாலு’ திரையரங்குகளை சுற்றி வரும் என்பதில் ஐயமில்லை. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை பிரபல சூரிய சேனலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.