பாபி சிம்ஹாவை பாராட்டிய சிம்பு-கௌதம் மேனன்!


பாபி சிம்ஹாவை பாராட்டிய சிம்பு-கௌதம் மேனன்!

‘ஜிகர்தண்டா’ படத்தில் அசால்ட் சேது கேரக்டர் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தது. இக்கேரக்டரில் நடித்த பாபி சிம்ஹா இதற்காக தேசிய விருதை வென்றார். இதனை தொடர்ந்து தற்போது ஹீரோவாக ‘பாம்பு சட்டை’, ‘உறுமீன்’, ‘கோ 2’, ‘வீரா’, ‘மெட்ரோ’, ‘அர்ஜுன் திவ்யா மற்றும் கார்த்திக்’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘ஆள்’ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில் ‘மெட்ரோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தங்கத்தின் விலை ஏற்றத்தை முன்வைத்து நம் நாட்டில் உருவாகும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக் காட்டியுள்ளாராம் இயக்குனர். இதில் பாபி சிம்ஹா குணா என்ற கேரக்டரில் தாதாவாக நடிக்கிறார். அறிமுக நாயகன் சிரிஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலரை சிம்பு, கௌதம் மேனன், ஜெயம் ரவி உள்ளிட்டோருக்கு போட்டுக் காட்டியுள்ளனர் படக்குழுவினர். இதனை கண்ட இவர்கள் பாபி சிம்ஹாவின் நடிப்பை வெகுவாக பாராட்டினார்களாம்.