அஜித்-விஜய் கம்முன்னு இருக்க, சீறி எழுந்தார் சிம்பு…!


அஜித்-விஜய் கம்முன்னு இருக்க, சீறி எழுந்தார் சிம்பு…!

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எங்களை அழைக்கவில்லை என ராதிகா சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தெரிவித்திருந்தனர். ஆனால் நடிகர் சங்கமோ அழைப்பு விடுத்தோம் என கூறி வருகிறது.

மேலும், நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு விஜய், அஜித், சிம்பு உள்ளிட்டோர் வருகை தராமல் போனதால், அந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது.

விஜய் அஜித் இருவரும் அமைதியாக இருந்தும் வரும் நிலையில், நடிகர் சங்கத்தை விட்டு விலகுவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார் சிம்பு.

அவர் கூறியதாவது…

‘சில காரணங்களுக்காக நான் சங்கத்தை விட்டு விலகுகிறேன். நான் பல்வேறு விதமான சிக்கல்களை சந்தித்த வேளையில் எந்த விதமான ஆதரவும் கிடைக்கவில்லை.

அவர்கள் நடத்திய நட்சத்திர கிரிக்கெட்டும் மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. பல நடிகர்கள் எனக்கு ஜோக்கர்களாகவே தெரிந்தனர்’ என்று கூறியுள்ளார்.