அனிருத்தை காப்பாற்றிய சிம்பு… நண்பேன்டா…!


அனிருத்தை காப்பாற்றிய சிம்பு… நண்பேன்டா…!

பீப் பாடல் பாடி, வழக்குகளில் சிக்கிக் கொண்ட சிம்பு, நேற்று கோவை போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சிம்புவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

கிட்டத்தட்ட அவரிடம் 30க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. சர்ச்சைக்குரிய பீப் பாடலை தான் பாடியதாக அப்போது சிம்பு ஒப்புக் கொண்டார்.

மேலும் அந்தப் பாடலை தான் இசையமைத்துப் பாடி ரகசியமாக வைத்திருந்ததாகவும், அது இணையங்களில் வெளியான விவகாரத்தில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

அனிருத்துக்கும் இந்த பாடலுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்டதற்கு… அனிருத்துக்கு இதில் எந்த விதமான தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு… “போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டேன். தற்போது பேச முடியாத சூழ்நிலையில் உள்ளேன். இனி நடக்கவிருப்பதை கடவுள் பார்த்துக் கொள்வார்” என்றார்.