மீண்டும் தாறுமாறு…. சிம்புவுடன் இணைந்த விக்ரம் பிரபு…!


மீண்டும் தாறுமாறு…. சிம்புவுடன் இணைந்த விக்ரம் பிரபு…!

கடந்த ஆண்டு சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் வெளியானது வாலு. இதில் இறுதியாக சேர்க்கப்பட்ட பாடலான தாறுமாறு என்ற பாடலை டி.ராஜேந்தர் பாடியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் சிம்பு தாறுமாறு என்ற பாடலை பாடியுள்ளார்.

ஆனால் இது இம்முறை விக்ரம் பிரபுக்காக அவர் பாடியுள்ளார்.

கணேஷ் விநாயக் இயக்கி வரும் வீரசிவாஜி படத்தில்தான் இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலுக்கு இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஷாம்லி, பேபி சாதனா, மொட்டை ராஜேந்திரன், ஜான்விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.